அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் மோசடி - நிர்வாகி அதிரடி நீக்கம்

அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக ஊடகங்களில் பேட்டியளித்த வட்டச் செயலாளர் உதயகுமார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், பேட்டியளித்த வட்டச் செயலாளர் உதயகுமார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :