விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு வருவது உறுதி

by Admin / 08-12-2025 01:09:48am
 விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு வருவது உறுதி

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் கே. எ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு தனியார் அரங்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்திருந்தார் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த காவல்துறை எதிர்பார்க்கப்படும் கூட்டம் மற்றும் வாகனங்களுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லை எனக் கூறி அனுமதியை நிராகரித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த பேரணி தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக ஒரு பொதுக்கூட்டம் நடத்த திட்டம் இடப்பட்டது. ஆனால் ,பொதுக் கூட்டத்திற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் ,தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு வருவது உறுதி என்றும் மாற்று இடம் அல்லது சட்டப்பூர்வமான வழிகளில் அனுமதி பெற்று கூட்டத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via