போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை.

by Editor / 04-04-2024 09:43:34am
போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை,  திருநாத முதலியார் தெருவில் வசிக்கும் சுமி ஸ்டுடியோ உரிமையாளர் நவீன்குமார் (42) என்பவர் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வருமானவரித் துறையினர் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு உள்ள நிலையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. எவ்வளவு பணம் அது யாருடைய பணம் என்று இதுவரை ரகசியமாக உள்ளது.
 

 

Tags : போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை.

Share via

More stories