ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டம்

by Staff / 02-05-2023 05:06:06pm
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு பணி மற்றும் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. கலவரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.அப்பொழுது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு வழங்க வேண்டும் என தெரிவித்தனர் அப்போது போலீசார் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கேட்டுக் கொண்டனர் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரை ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
 

 

Tags :

Share via