இஸ்ரேலில் வான் எல்லைக்குள் நுழையும் எதனையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதம் பரிசோதனை.

by Staff / 15-04-2022 04:43:49pm
இஸ்ரேலில் வான் எல்லைக்குள் நுழையும் எதனையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதம் பரிசோதனை.


இஸ்ரேலில் வான்எல்லைக்குள் நுழையும் எதனையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நவீன ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.ஏற்கனவே ஆயின் டோம் என்ற நவீன  பாதுகாப்பு அமைப்பை கொண்டுள்ள நிலையில் தற்போது புதிய வகை ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது. ஆயின் பீம்  என பெயரிடப்பட்டுள்ள இந்த வான் பாதுகாப்பு ஆயுதம் லேசர் மூலம் இயங்கும் வகையில் இஸ்ரேலை சேர்ந்த  பாதுகாப்பு அமைசசகம் தெரிவித்துள்ளது  இந்த வான் எல்லைக்குள் நுழையும் ஆளில்லா விமானம் ராக்கெட் ஏவுகணை போன்றவற்றை இந்த ஆயுதம் லேசர் மூலம் தாக்கி அழிக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகவும் சுலபமாகவும் செயல்பட கூடியதாகவும் மற்ற பாதுகாப்பு வழிமுறைகளை விட விலை குறைவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆளில்லா விமானம் போன்றவற்றில் சுற்று விழ்த்தலேசரை  பயன்படுத்தும் உலகின் முதல் ஆற்றல் அடிப்படையிலான ஆயுத அமைப்பை இதுவாகும் என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via