டெல்லியில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்த சூழலில் கடந்த பிப்ரவரி 28ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி, மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கினர்.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா கூறும்போது, கொரோனா பாதிப்புகள் லேசான அளவில் அதிகரித்து உள்ளன. ஆனால், மருத்துவமனையில் சேருவது அதிகரிக்கவில்லை. அதனால், நாம் கவலை கொள்ள வேண்டாம்.
அச்சமடைய தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரசானது உள்ள சூழலில், அதனுடன் வாழ நாம் பழகி கொள்ள வேண்டும். நிலைமையை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். பள்ளிகளுக்கான ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
Tags :