குற்றாலம் பேரருவியி ல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி. ஐந்தருவில் தடை நீடிப்பு.

by Editor / 04-07-2023 10:02:42am
குற்றாலம் பேரருவியி ல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி. ஐந்தருவில் தடை நீடிப்பு. தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் இங்கு உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அருவிகளில் குளிப்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் இந்த நிலையில் ஜூன் மாதம் முடிந்தும் தென்மேற்கு பருவமழை இந்த பகுதியில் வலுப்பெறாமல் இருந்து வருவதின் காரணமாக இங்கு உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு முதல் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி கொட்டியதின் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் சீசன் காலம் என்பதால் குளிப்பதற்கு  வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ள பகுதிகளில் தடுப்பு விழிகள் வைத்து பாதுகாப்பு வளையத்து பகுதிக்கு நெருங்க விடாமல் மற்ற இரு பகுதிகளிலும் பெண்கள் குளிப்பதற்கு ஏற்பாடுகள் பேரறிவில் செய்யப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் அதேபோன்று ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது பழைய குற்றாலம் அருவியில் இன்று லேசாக தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo