ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் TTF வாசன்

by Staff / 03-10-2023 01:38:41pm
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் TTF வாசன்

பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கி கைதான TTF வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். மேலும், கடந்த மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா சென்ற பிரபல யூடியூபர் TTF வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் TTF வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via