கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் கைது

by Staff / 31-01-2023 12:49:13pm
கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் கைது

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்ற வண்ணம் உள்ளது புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தலைவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது பதிவின் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தபின் போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பதும் இவர் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்த தலைவாசல் காவல் துறையினர் விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் கலாச்சாராயத்தையும் கலாச்சாராயம் கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo