த.வெ.க. ஆட்சி அமைக்க இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரியிருந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணிக்குத்தான் தங்கள் ஆதரவு, தவெக-விற்கு இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. விஜய் தலைமையிலான தவெக, 2 இடங்களில் வென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடம் ஆதரவு கோரியிருந்தது.தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை என இப்பொழுது வலைதள பதிவில் தம் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளதோடு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் தொடர்வதாக தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சியும் இன்னும் ஆதரவை அளிக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழக வெற்றி கழகத்திற்கு சிக்கல் தொடர்கிறது.
Tags :


















