ஹெல்மெட் அணியாமல் இனிமேல் வாகனம் ஓட்ட மாட்டேன்

by Staff / 22-04-2022 03:54:54pm
ஹெல்மெட் அணியாமல் இனிமேல் வாகனம் ஓட்ட மாட்டேன்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு முறை எழுதச்சொல்லி மாவட்ட எஸ்பி நூதன தண்டனை வழங்கினார். பழனி பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு எஸ் டி சீனிவாசன் இனிப்பு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து திருக்குறளை எழுதச் சொல்லி இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினார்

 

Tags :

Share via
Logo