திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்ட ஆதரவு-அன்புமணி ராமதாஸ்
நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்:அப்போது அவர் தெரிவித்ததாவது:நாகப்பட்டினம் மாவட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும்: சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்:தமிழ்நாடு தொழிற்சாலை 80% வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும்:ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்,ஆளுநர் தமிழகத்தில் அரசியல் செய்யக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டத்தில் இனி யார் உயிர் இழந்தாலும் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும்.நீட் தேர்வு, மின் கட்டண கணக்கீடு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை.மற்ற மாநிலங்களைப் போல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்:நாகை திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு தனது ஆதரவு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :