பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

by Editor / 27-10-2022 08:08:52am
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் , திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo