உடனே புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

by Staff / 03-03-2024 05:08:51pm
உடனே புதிய  மாவட்டம் உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உடனே உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.புதிய மாவட்டங்களை உருவாக்க விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்
 

 

Tags :

Share via

More stories