2026 சட்டமன்றத்தேர்தலை நோக்கி வேகமெடுக்கும் அதிமுக.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் முழுமையாக தங்களை ஈடுபடுத்த தொடங்கியுள்ளன இதன் ஒரு பகுதியாக அதிமுக வட்டாரங்கள் வலுவோடு 2026 தேர்தலை சந்திக்க களமிறங்கியுள்ளன இதன் ஒரு பகுதியாக அதிமுக தலைமை சார்பில் கடந்த ஏப்ரல் 23: எம்எல்ஏக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.ஏப்ரல் 24 : பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைகூட்டம் நடந்தது.ஏப்ரல் 25: மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து இன்று மே 2 : செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின்னர் கட்சி நிர்வாகிகளை முதலில் தயார்படுத்தி வரும் அதிமுக, தொடர்ந்து மக்களிடம் களஅரசியலை முன்னெடுக்கவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. விரைவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் தங்களின் களப்பணிகளை முழுவீச்சில் முன்னெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.2026 இலக்கு என்ற நோக்கில் அதிமுக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : 2026 சட்டமன்றத்தேர்தலை நோக்கி வேகமெடுக்கும் அதிமுக.


















