பெரியார் நினைவு தினம்: எடப்பாடி புகழஞ்சலி..

பெரியார் நினைவு தினத்தை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் ப்திவிதுள்ள பதிவில், மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடந்த நம் சமூகத்தை விழித்தெழ வைத்த பகுத்தறிவாளர், சாதி, மத ரீதியான சமூக தீண்டாமைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த புரட்சியாளர், நாடெங்கும் சமத்துவம் நிலவ போராடிய மாபெரும் தலைவர், தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :