ஒவ்வொரு விழாக்களும் சடங்கு முறைகளும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான மகிழ்ச்சியாக இல்லை.
மனிதர்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த பொழுது அடைந்த மகிழ்வும் சந்தோசமும் இப்பொழுது இல்லை.. அவனால் உருவாக்கப்பட்ட மதம், ஜாதி இன்னவரை கண்டுபிடிக்களின் காரணமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்கக்கூடிய சாதனங்களின் வழியாக- செயற்கையான மகிழ்ச்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இது ஒட்டுமொத்த மனிதர்களுக்கான இயற்கையான மகிழ்ச்சி என்றால் இல்லை
.அவரவர் நாடு, அவரவர் மதம், அவரவர் ஜாதி இதை பின்பற்றிய ஒவ்வொரு விழாக்களும் சடங்கு முறைகளும் செய்யப்படுவதால் ,அது ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான மகிழ்ச்சியாக இல்லை..
மனிதர்களால் படைத்தளிக்கப்பட்ட கருவிகளால், வசதி படைத்தோர் மட்டுமே வாங்கி அனுபவிப்பதற்கான சூழல்களை பெற்றிருக்கிறார்கள். நாடு விட்டு நாடு பறந்து சென்று, உலகத்தின் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் பணம் தேவை..
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லுகிற பொழுது விசா பாஸ்போர்ட் என்கிற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.. குளிர்சாதன பெட்டி, கார் , தொலைக்காட்சி பெட்டி, செல்லிடை பேசி, வீட்டிலே பயன்படுத்தப்படுகின்ற இயந்திர சாதனங்கள் என அனைத்திலும் பணத்தை வைத்துத்தான் சந்தோஷத்தை அடைய முடிகிறது..
நாகரீக உலகத்தில் உடுத்துகிற உடையிலிருந்து- பயன்படுத்துகிற பொருளிலிருந்து -அத்தனையும் தனிமனித சந்தோஷத்தில் விலை பணம், பணம்.. கல்வி கூட பணம் இருந்தால்தான் பெற முடியும் என்கிற சூழல் . அது எல்.கே.ஜியில் இருந்து எம்.பி.பி.எஸ் வரைக்கும் ஆன அளவுகோலாக பணம் வைக்கப்பட்டு இருக்கிறது.. நல்ல கல்லூரி- நல்ல பாடங்களை எடுத்து படிப்பதற்கு- பயிற்சி வகுப்புகளுக்கு கட்ட வேண்டிய பணமும் கல்லூரிக்கு கட்ட வேண்டியது பணமும் நம்மிடம் இருந்தால் தான் நாம் வாழுகின்ற சமுதாயத்தில், நம் பிள்ளைகளை நல்ல ஒரு இடத்தில்.... நல்ல ஒரு பாடத்தில் படிக் க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற மகிழ்ச்சி உருவாகும். அந்த மகிழ்ச்சியை உருவாக்குவது .. உங்கள் பிள்ளைகள் படிப்பதை விட என் பிள்ளைகள் படிக்கின்ற இடத்திற்கு இவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்கிறோம் என்கிற பெருமிதம், சந்தோஷம் செயற்கையாக உருவாக்கப்பட்ட பணத்தால் வருகிறது. ஆனால்,, மனிதன் பேசத் தெரிவதற்கு முன்னால் இருந்த மிருக நிலையில்.. பசித்த பொழுது .. இயற்கையாக கிடைத்த பொருளை உணவாக எடுத்து சாப்பிட்டான், ஓடுகிற நதியிலோ... தேங்கி நிற்கின்ற குட்டையிலோ கிடைக்கின்ற நீரை குடித்து தாகம் தீர்த்து க்கொண்டான்.. ஆணும் பெண்ணும் பிறந்த மேனியாக இருந்த பொழுது... உடலின் தேவைகளையும்ம் பூர்த்தி செய்து கொண்டு... எந்தவித கவலையும் அற்று ...எந்தவித எதிர்கால ஆசைகளும் கனவுகளுமற்று மிருகங்களோடு மிருகங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்..
மொழி கண்டறியப்பட்டு பேச ஆரம்பித்த பொழுது... அதில் வேறுபாட்டை உருவாக்கிக் கொண்டு.. அவனுக்கென்று ஒரு பண்பாட்டையும் ஒரு நாகரிகத்தையும் உருவாக்கி.... தனித்த ஒரு குழுவாக மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டா ன்.
: இன்றைக்கு இருக்கின்ற பண்டிகைகள் போன்று மத வழியாக தீபாவளி, கிறிஸ்மஸ் ,ரம்ஜான் என மத வழியாக பிரித்து மகிழ்ச்சியை தேடிக் கொள்ளவில்லை. உலகமெங்கும் தாம் விளைவிக்கின்ற பொருளை ...இயற்கைக்கு படைத்து சந்தோசம் கொண்டாட கூடிய பண்டிகையாக புது உற்பத்தி திருநாளாக- அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டது. பொதுநிலையில்.. ஆனாலும் இன்று அதுவும் இந்து மதம் சார்ந்ததாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி என்கிற பொழுது அது மதத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்மஸ் என்பது அந்த மதத்தை உருவாக்கியவர் என்கிற நிலையில் ஏசு கிறிஸ்து பிறப்பை- அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த பொழுதை பண்டிகைகளாக கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் ,பக்ரீத் போன்று இஸ்லாமியர்கள் கொண்டாட கூடிய பண்டிகைகளும் மதம் சார்ந்த அவர்களுடைய வாழ்வியல் சார்ந்த நிலைகளோடு கொண்டாடப்படுகின்றன. ஆனால், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரே நிலைப்பாட்டில் பண்டிகைகளை கொண்டாடுகின்ற போக்கு இன்றைக்கு இல்லை
. ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் என்று கொண்டாடப்பட்டாலும் கூட அது ஒரு பொது நிகழ்வாக- மகிழ்ச்சியை ஒட்டுமொத்த மக்களுக்கும் தரக்கூடியதாக இல்லை. அதிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதனால் மனிதர்களுக்கு மகிழ்ச்சி என்பது இப்பொழுது வாங்குகிற பொருளை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிற நிலையாக மாறிவிட்டது.. இயற்கையான மகிழ்வு என்பது இல்லாமல் போய்விட்டது.
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, படிப்பு, வேலை, பணம் இவைகள் தான் மனித மகிழ்ச்சிக்கான மூல காரணியாக அமைந்து விட்டன.
Tags :