குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றம்

by Editor / 12-04-2025 12:43:04pm
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றம்

வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்க முடியாவிட்டால், அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via