காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு நோட்டீஸ்.

by Editor / 05-08-2024 09:47:48am
காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு நோட்டீஸ்.

காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சீமான் காவல்துறையினரை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், "சீமானின் இது போன்ற தரக்குறைவான பேச்சை எல்லாம் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று வருண்குமார் எஸ்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 

 

Tags : காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய

Share via

More stories

Logo