மக்களவை சபாநாயகர் ஓம்பிா்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு

by Admin / 10-02-2026 07:06:13am
மக்களவை சபாநாயகர் ஓம்பிா்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு

மக்களவை சபாநாயகர் ஓம்பிா்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. .இந்திய கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. பிரதமர் மோடி அவைக்கு வராமல் இருக்க பெண்எம்.பி.க்கள் தடையாக இருப்பதாக சபாநாயகர் கூறியது பெண் எம்பிக்களை அவமதிக்கும் செயல்.. கடந்த வாரம் எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன .இந்த தீர்மானத்தைக் கொண்டு வர குறைந்தது 100 எம்பிக்களின் கையெழுத்து தேவை .இதற்கான கையெழுத்து சேகரிக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 94 சி  இந்த பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்படும். தீர்மானம் கொண்டு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

 

Tags :

Share via

More stories