பிரிட்டிஷ் பிரதமர் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்.

by Admin / 10-02-2026 07:55:38am
பிரிட்டிஷ் பிரதமர்  கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பீட்டர் மண்டல்சன் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ராஜினாமா செய்யுமாறு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்தப் பிரச்சினைக்கு , பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பீட்டர் மண்டல்சனை, அமெரிக்காவுக்கான பிரிட்டிஷ் தூதராக ஸ்டார்மர் நியமித்ததே முக்கிய காரணமாகும். 

 கடந்த 24 மணிநேரத்தில்,ஸ்டார்மரின் மிக நெருக்கமான  தலைமை அதிகாரி மார்கன் மெக்ஸ்வீனி மற்றும் தகவல் தொடர்புத் தலைவர் டிம் ஆலன் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
 
ஸ்காட்டிஷ் லேபர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார்ஸ்டார்மர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

 ஸ்டார்மரின் பதவி இனி நீடிக்க முடியாது என்று  எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேட்னோக்கும்  கூறியுள்ளார். 

 ஸ்டார்மர் இவ்வளவு அழுத்தங்கள் இருந்தபோதிலும், தான் பதவி விலகப்போவதில்லை என்றும் நாட்டின் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லத் தயாராக இல்லை என்றும்  திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவரது தலைமைக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. 

 

Tags :

Share via

More stories