ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனர் ஜிம்மி லாய்க்கு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனர் ஜிம்மி லாய், ஹாங்காங்கின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் "வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக" குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாங்காங் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 77 வயதான அவர் ஏற்கனவே சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்றது உள்ளிட்ட இதர குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்து வருகிறார்.
ஆப்பிள் டெய்லி (Apple Daily) என்பது ஹாங்காங்கில் இயங்கி வந்த ஒரு பிரபலமான ஜனநாயக சார்பு செய்தித்தாள் ஆகும்.1995-ல் ஊடக அதிபர் ஜிம்மி லாய் என்பவரால் தொடங்கப்பட்டது.சீன அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதன் சொத்துக்கள் முடக்கப்பட்டதால், ஜூன் 2021-ல் இது தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.பிப்ரவரி 9, 2026 இல் தன் நிறுவனர் ஜிம்மி லாய்க்கு வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறி, ஹாங்காங் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தித்தாள் ஹாங்காங்கின் கருத்துச் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதன் மூடல் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Tags :



















