முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி கொலை

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜ குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (68) டெல்லியில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த அவருடைய வீட்டில் பணியாற்றும் பெண் உதவியுடன் மூன்று பேர் கொலை செய்துள்ளனர்.
அவருடைய வீட்டிற்கு அருகே பணியாற்றும் ராஜூ லக்கனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியின் டி.சி.பி. இங்கித் பிரதாப் சிங் இது குறித்து பேசுகையில், 'இரவு 11 மணி அளவில் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் மஞ்சு என்பவர் அலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
Tags :