ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் தீ பற்றியாதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை விமான போக்குவரத்து இயக்குனரகம்
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தீ பற்றியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லைஎன்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி நோக்கி சென்ற விமானத்தில் பறவை மோதி என்ஜின் பகுதியில் தீ பற்றிய தகவல்கள் வெளியாகின. விமான போக்குவரத்து இயக்கத்தினாின் முதற்கட்ட அறிக்கையில் விமான என்ஜின் பகுதியில் தீபற்றியதற்கான தடயங்கள் காணப்படவில்லை பறவை மோதியதில் 4 பிளேட் உடைந்து ரத்தக் கறைகள் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :