வெள்ளை அறிக்கை வேண்டும்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :