12 வயது சிறுமியை கடத்தி சென்று ஆடையை கழட்டிய ஓட்டுனர்! சென்னையில் பயங்கரம்
சென்னை அருகே 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருமுல்லைவாயில் வீட்டில் இருந்தபடியே தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் தான் தைத்த துணிகளை அருகில் உள்ள கம்பெனியில் கொடுத்து வர 12 வயது மகளை அனுப்பியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஓட்டுநர் குமரேசன் என்பவர் வீட்டுக்குள் சிறுமி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் பாத்ரூமில் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமிக்கு குமரேசன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமரேசனை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
Tags :



















