தீ பற்றி எரிந்த தென்னை மரங்கள்

by Editor / 22-03-2025 03:31:36pm
 தீ பற்றி எரிந்த தென்னை மரங்கள்

கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் நரிக்குளத்தின் கரைப்பகுதியில் குப்பை மற்றும் புதராக மண்டி கிடந்த பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் பக்கத்தில் உள்ள தென்னை மரத்தின் உச்சியில் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனை கவனிக்காமல் விட்டிருந்தால் அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள்ளும் தீ பரவியிருக்கும். மேலும் தீயை அணைப்பதில் தீயணைப்பு துறை யினர் துரிதமாகசெயல்பட்டதால் அதுபோன்ற பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories