யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற திமுக எம்.பி.கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது.

by Editor / 17-05-2024 12:19:56am
யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற திமுக எம்.பி.கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது.

விருதுநகர் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சேத்தூர் பகுதியில் ஆய்வாளர் கோபால் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானைத் தந்தங்களுடன் வந்த தென்காசி எம் பி தனுஷ் குமாரின் முன்னாள் கார் ஓட்டுநர் செல்லையா மற்றும் மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின்னாக பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகின்றது இதன் தொடர்ச்சியாக அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓட்டுநர் செல்லியாவை பணியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த யானை தந்த கடத்தல் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற திமுக எம்.பி.கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது.

Share via

More stories

Logo