வருது..வரிசையாக பண்டிகைகள் ரயிலில் முன்பதிவு செய்ய மறந்திராதீங்க

by Editor / 17-05-2024 12:06:06am
வருது..வரிசையாக பண்டிகைகள் ரயிலில் முன்பதிவு செய்ய மறந்திராதீங்க

தொடங்கவுள்ள பண்டிகை கால இரயில் முன்பதிவு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு.

ஆயுத பூஜை, விஜயதசமி வருகிற அக்டோபர் மாதம் 11,12 தேதிகளில் வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை கிழமை அன்று வருகிறது.ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறதுகீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ------- பயண நாள் --- பயண கிழமை

ஜுன் 11 -- அக்டோபர்  09 - 2024 -- புதன்

ஜுன் 12 --- அக்டோபர் 10- 2024 --- வியாழன்

ஜுன் 13 -----  அக்டோபர் 11- 2024 ---- வெள்ளிக்கிழமை - ஆயுதபூஜை

ஜுன் 14  -----  அக்டோபர் 12-2024 ----- சனிக்கிழமை - விஜயதசமி

ஜுன் 15 ----- அக்டோபர் 13 -2024 --- ஞாயிறு 

ஜுன் 16  --- அக்டோபர் 14-2024 -- திங்கள் 

ஜுன் 17 -- அக்டோபர் 15-2024 - செவ்வாய் 

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும் காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.

 

Tags : வருது..வரிசையாக பண்டிகைகள் ரயிலில் முன்பதிவு செய்ய மறந்திராதீங்க

Share via