ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-இந்திய தூதரகம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்தியர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார மற்றும் ராணுவ தளங்கள் பல மாடி கட்டடங்களின் மேல் தளங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் சாலை வழியாக பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கண்டிப்பாக இந்திய தூதரகத்தை முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.. தூதரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றும் அங்கு இருக்கும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள ஈரானில் உள்ள இந்திய தூதரகம் கீழ் வரும் எண்களை வெளியிட்டுள்ளது
.989128109115
989128109109
989128109102
989932179359
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்தியர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ தகவல்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :



















