புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 9- தேதி நடைபெறுகிறது.
அசாம் ,கேரளா யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 9- தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை 5.00 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்தது. வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பது தேர்தல் விதி. அதன்படி புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் பிரச்சாரம் ஓய்ந்தது.அந்தந்த தொகுதி வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சியினர் மற்றும் வெளியூர் ஆட்கள் அனைவரும் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் அல்லது இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. தொலைக்காட்சி ,வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் தொடர்பான விளக்கங்களை ஒளிபரப்பக் கூடாது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்க அனுமதி உண்டு. .ஆனால் எவ்வித பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது.
Tags :



















