தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்:27 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவித்துள்ளார்.மேஙவிடுமுறை அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விடுமுறை செலாவணி முறிச் சட்டம் (Negotiable Instruments Act, 1881) படி பொது விடுமுறை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக 2025 நவம்பர் 8ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்:27 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


















.jpg)
