by Staff /
26-06-2023
06:02:17pm
இந்தியாவில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிட தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அரசிடம் விளக்கம் பெறாமல் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
Tags :
Share via