திமுகக்காரனின் காலணியை கூட வாங்க முடியாது: ஆர். எஸ் பாரதி

by Staff / 01-03-2024 03:51:52pm
திமுகக்காரனின் காலணியை கூட வாங்க முடியாது: ஆர். எஸ் பாரதி

திமுக தொண்டனின் காலணியை கூட பாஜகவால் வாங்க முடியாது என ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பாஜக இந்தியா முழுவதும் போய் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது. அந்த வேலை எல்லாம் திமுகவிடம் முடியாது. செத்தாலும் சாவானே தவிர இந்த வேலை திமுகக்காரனிடம் நடக்காது. எங்களை மிரட்டி பார்க்க 1962இல் தனி சட்டமே கொண்டு வந்தார்கள். அதற்கே பயப்படாத நாங்கள் நீங்கள் போடும் சத்தத்துக்கா பயப்பட போகிறோம் என்றார்.
 

 

Tags :

Share via