துப்பாக்கிச் சூடு.. எட்டு பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து மீது குண்டர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வடக்கு பாகிஸ்தானின் சிலாஸ் நகருக்கு அருகில் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், 2021ஆம் ஆண்டில், சிலாஸ் எல்லையில் உள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது சீனப் பிரஜைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
Tags :



















