அதிமுக செயலாளர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டிைய அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (64). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று (ஜுலை 3) இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்த போது அவரை நோட்டமிட்டபடி 2 டூவீலர்களில் சிலர் கும்பலாக எதிரில் வந்து வழிமறித்து அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
Tags : அதிமுக செயலாளர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை