மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு.

by Editor / 29-05-2023 09:50:22am
மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடல் பகுதியில் ஜூன்-1 முதல் 61-நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், துறைமுகங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. எஞ்சிய படகுகள் நாளை மறுநாள் மாலைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்  வரத்து குறைவால் மீன் விலை உயர்ந்துள்ளது.குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 1-கிலோ வஞ்சிரம் மீன் 1600-ரூ க்கும் கட்டில் பிஷ் கணவாய் மீன் 700-ரூ க்கும் லெதர் ஜாக்கெட் கிளாத்தி மீன் 300-ரூக்கும் திருக்கை மீன் 250-ரூ க்கும் விற்பனை ஆகிறது.மீன் வரத்து இல்லாமல் விலை உயர்வால் பொதுமக்கள் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via