விஷம் குடிப்பதை வீடியோவாக எடுத்து இளைஞர் தற்கொலை
உ.பி., ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த சுனில் திவாரி(22) என்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிப்பதற்கு முன்னர் அதை வீடியோவாக எடுத்த அவர், கிராம தலைவர் மற்றும் நெருங்கிய நண்பர்களால் துன்புறுத்தப்பட்டதாக கூறினார். மேலும், “விஷம் குடித்துவிட்டேன், இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை” என கண்ணீர் மல்க பேசினார். சுனிலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :