திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் .
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்மாவட்டங்களுக்கு இன்று ஜன.19 கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tags : திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் .