மதுரையில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

by Staff / 02-02-2024 02:48:34pm
மதுரையில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மதுரையில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். அங்கிருந்து பெரும்பாலான மக்களுக்கு குடையை வழங்கி ஆதரவு தரும்படி மாவட்ட செயலாளர் கல்லணை கேட்டு கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள். நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via