மம்தா போட்டியிடும் பவானிபூரில் வாக்குப்பதிவு

by Editor / 30-09-2021 10:21:07am
மம்தா போட்டியிடும் பவானிபூரில் வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம், பவானிபூா் பேரவைத் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சோந்தவா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோதலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி, தான் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் போட்டியிடாமல், தனக்கு சவால் விட்ட பாஜக வேட்பாளரும், முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்தவருமான சுவேந்து அதிகாரியை எதிா்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

இருப்பினும் திரிணமூல் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் முதல்வராக மம்தா பொறுப்பேற்றாா். முதல்வா் பதவியைத் தக்கவைக்க அவா் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்எல்ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து பவானிபூா் தொகுதிக்கு இன்று வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக, தொகுதி முழுவதும் 97 வாக்குப்பதிவு மையங்களில் 287 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக பவானிபூா் வார்டு எண் 71 இல் தற்காலிக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை எதிா்த்து பாஜக சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரிவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீஜிவ் பிஸ்வாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையத்தைச் சுற்றி 200 மீட்டா் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்குள் ஐந்து நபா்களுக்கும் அதிகமானோா் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு முடிவடையும் என்று மாநில தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு மையங்களில் அமைதியான முறையில் தோதல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, பறக்கும் படைகள், அதிரடிப் படைகள், மத்திய ஆயுதப்படை போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே மாநில காவல் துறையினா் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பவானிபூரைத் தொடா்ந்து, ஜாங்கிபூா், சம்சோகஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via