1 கிலோ 500 கிராம் தங்க நகைகளைபறித்து சென்ற கொள்ளையர்கள் மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை.
மதுரை நகை கடையில் பணி புரியும் விஜயராகவன் என்பவர் 1 கிலோ 500 கிராம் தங்க நகைகளை கடந்த 5 தேதி இரவு காரைக்குடி நகைக்கடை வியாபாரிகளுக்கு கொடுப்பதற்காக பேருந்தில் எடுத்து வந்து பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் பொழுது பழைய சிவன் தியேட்டர் அருகே காரில் வந்த மர்மகும்பல் அவர் கொண்டு வந்த நகைகளை பறித்து சென்றது.அவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக ஏடிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்ததில் விஜயராகவன் மதுரையில் வேலை பார்க்கும் கடையில் பணிபுரிந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது அவனை போலீசார் விசாரணை செய்ததில் மனோஜ் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனது கூட்டாளிகளை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வரவழைத்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக மனோஜை கைது செய்த காரைக்குடி காவல் துறையினர் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களைபிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் விரைந்துள்ளனர்.
Tags : 1 கிலோ 500 கிராம் தங்க நகைகளைபறித்து சென்ற கொள்ளையர்கள்.



















