கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் .

by Admin / 17-11-2025 09:20:59am
 கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் .

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக  மேற்கு- வட மேற்கு நோக்கி நகர்வதன் காரணமாக  ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் என்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. நாளை தென் தமிழகத்தில் பல இடங்களிலும் வட தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 19 மற்றும் 20 தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்  வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

 

 

Tags :

Share via