நோன்பு திறக்கும் நிகழ்வுக்காக 18 கோடி ரூபாய் மதிப்பில் 8,400 டன் அரிசி -சக்கரபாணி .

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பொருளூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஐ.வாடி பட்டி தேவத்தூர், மோதுபட்டி, மற்றும் பழனி - சாளக்கடை கொத்தையம், உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக செல்லக்கூடிய புதிய ஐந்து பேருந்துகளை உணவுத்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்,
அதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் டவுன் பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் என்னும் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் 18 கோடி ரூபாய் மதிப்பில் பேசுகையில்,
தமிழகத்தில் இந்த ஆண்டு இஸ்லாமிய பெருமக்களின் நோன்பு திறக்கும் நிகழ்வில் அருந்தப்படும் கஞ்சிக்காக 18 கோடி மதிப்பில் 8400 டன் அரிசி தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சீரிய வளர்ச்சி அடைய வேண்டும் என அயராது உழைத்து வருவதாக தெரிவித்தார் .தனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags : தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்