தென்காசிநகரமன்றத்தலைவரை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.
தென்காசி நகராட்சி பகுதியான மேலப்புலியூரில் வீரமா முனிவர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இங்கு படிக்கும் மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தும் இடத்தில் ரூ.13 லட்சம் நிதியில் புதிதாக நியாய விலைக் கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ள திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நியாய விலைக் கட்டிடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்.இதே போன்று புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் முன்பாக நகராட்சி நிர்வாகத்தில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடத்தின் நுழைவு வாயிலை மேற்கு பகுதியில் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து நகர்மன்ற தலைவர் சாதிரின் செயலை க்கண்டித்தும்,தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தை சேர்ந்த பங்கு தந்தைகள் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகர்மன்றத்தலைவர் சாதிரை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Tags : தென்காசிநகரமன்றத்தலைவரை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.












.jpg)






