. இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை விட 70 தொகுதிகளில் மட்டும் பின்னடைவில்  உள்ளது.

by Admin / 04-06-2024 11:39:35am
. இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை விட 70 தொகுதிகளில் மட்டும் பின்னடைவில்  உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் 2024 பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி இரண்டுக்கும் இடையேயான தொகுதிகளின் நிலவரங்கள் கிட்டத்தட்ட கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பாரதிய ஜனதா கூட்டணி 296 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 227 தொகுதிகளிலும் மற்றவர்கள் 20 தொகுதிகளிலும் முன்னணி வகுத்து வருகிறார்கள் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கை ஓங்கி உள்ளது பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என்கிற கணிப்பு தற்பொழுது அங்கு பொய்யாகி வருகிறது. இதேபோன்று ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் என் டி ஏ கூட்டணியும் இந்தியா கூட்டணியும் சம பலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை விட 70 தொகுதிகளில் மட்டும் பின்னடைவில்  உள்ளது. இரு கூட்டணிகளில் பெரும்பான்மையை பெறப்போவது யார் என்பது குறித்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தெரிய வரும்.

 

Tags :

Share via