அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, போராட்டம்--நீதிபதி வேதனை

by Staff / 02-01-2025 12:49:30pm
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, போராட்டம்--நீதிபதி வேதனை

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள்.

இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் - நீதிபதி.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கேள்வி. பாமக போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் நீதிபதி மறுப்பு..

 * போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று.

* இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும்.

* இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள்.

* இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

* காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

* இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல

* வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

* இந்த சமூகத்தில்  பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

 

Tags :

Share via