இன்று  திருவண்ணாமலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

by Admin / 14-12-2025 11:11:06am
இன்று  திருவண்ணாமலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

இன்று  திருவண்ணாமலை தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.. இதற்கான ஏற்பாடு திருவண்ணாமலை அடுத்த மலப் பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் மாலை 4.00 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு .க .ஸ்டாலின் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். வட தமிழகத்தில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான செயல்பாடுகளை அமைச்சர் எ.வ வேலு செய்து வருகிறார். விழாவில் பங்கேற்க உள்ள கட்சியினருக்கு சைவ அசைவ உணவுகள் விதவிதமாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தன்னுடைய வலைதள பதிவில் மலை நகரில் மாலை சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

இன்று  திருவண்ணாமலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி
 

Tags :

Share via