தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

by Editor / 25-08-2023 10:37:44pm
தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார்   மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு நாளை (26.08.2023) எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 4 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற உள்ளது.

மேற்படி தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  ஆகியோர் இன்று நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Tags : தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Share via