ஆட்சித்தலைவர்,எம்.எல்.ஏ ஆகியோரைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்.

by Editor / 25-08-2023 11:02:06pm
ஆட்சித்தலைவர்,எம்.எல்.ஏ ஆகியோரைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கள்ளகுறிச்சியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியர் திரு.மனோஜ் முனியன் அவர்களை இடைக்கால பணிநீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர் ஷ்வரன் குமார்,ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், பெண் அலுவலர்களை ஒருமையில் பேசி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு அத்துமீறி அடவாடியாக நடந்து கொண்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்  வசந்தம் கார்த்திகேயன்  தரம் தாழ்ந்த நடவடிக்கையினை கண்டித்தும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம் தென்காசி ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலம், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி வட்டாட்சியர் அலுவலகம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம், சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து வட்ட கிளையிலும் உள்ள வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட  பொறுப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு மிக எழுச்சியாக கன்டன ஆர்ப்பாட்டம்நடந்தது மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் . பி.கே.மாடசாமி அ. தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் .திருமலை முருகன் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் .இசக்கி துரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் செல்வி தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்த்தான்டபூபதி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர்  சேகர் ஆகியோர் கண்டன  உரையாற்றினர் நிறைவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் க.துரைசிங் அவர்கள் நிறைவுரையாற்றினார் இறுதியாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன் நன்றியுரையாற்றினார் திரளான வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Tags : ஆட்சித்தலைவர்,எம்.எல்.ஏ ஆகியோரைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Share via

More stories

Logo